வீராச்சாமி - விஐபி கமெண்ட்ஸ்Posted By : vettipayalMay 14, 2009 வீராச்சாமியை பார்த்துவிட்டு வந்த பிரபலங்களின் கருத்துக்கள்!!! கலைஞர்... நம் பாச மிகு தம்பி தாய் கழகத்தை விட்டு வெளியே சென்றாலும் மற்ற புல்லுரிவிகளை போல் எதிர் முகாமில் சேராமல் மீண்டும் நம்முடனே இணைந்தவர். அவரை யாரும் சேத்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயமாக இருந்தாலும் மீண்டும் நம் அரவணைப்பில் வந்தவர் என்பதை மறக்காததே தமிழர் மரபு. இந்த பட ட்ரைலரை நம் குடும்ப தொலைக்காட்சியில் பார்த்ததும், நம் வீரத்தை நிருபிக்க வீராச்சாமியை பார்த்தால் போதும் என்று உறுதியாக உணர்ந்தேன். அதை சற்றும் சறுக்காமல் செய்திருக்கிறார் அன்பு தம்பி விஜய டி.ராஜேந்தர். நான் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலே சிறையிலிருந்ததைவிட கொடுமையான நேரமாகவே அதை உணர்ந்தேன். இப்போது எதிர் முகாமிலிருப்பவர்களை கேட்கிறேன், உங்கள் மனதில் துணிவிருந்தால் இந்த படத்தை முழுதும் பார்த்துவிட்டு பேசுங்கள் எங்கள் வீரத்தை பத்தி. தம்பிகளே! இந்த சவால் எதிர் முனையிலிருப்பவர்களுக்குத்தான். கழக கண்மணிகள் மேல் எனக்கு எப்போதும் பாசமிருக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் உணர்வீர்கள்!!! விஜயகாந்த்... இதற்கு கலைஞரும் அவர் குடும்ப சேனலுமே காரணம். எலக்ஷன் சமயத்தில் நான் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடித்த கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற நல்ல படங்களை போட்டு என்னை சினிமா துறையிலே இருக்க வைக்க அவர்கள் முயற்சி செய்தும், மக்கள் நான் கடைசியில் நடித்த எங்கள் அண்ணா, கஜேந்திரா, தென்னவன், நரசிம்மா போன்ற படங்களை மனதில் வைத்து என்னை ஜெயிக்க வைத்தனர். தற்போது அதை இந்த டி. ஆரை வைத்து முறியடிக்க முயற்சி செய்கிறது இந்த தி.மு.க அரசு. இதை நான் ஒன்றும் சாட்சியில்லாமல் சொல்லவில்லை. டி.ராஜேந்தர் என்ற பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றியதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவே பெரிய சாட்சி. நான் யாருடனும் கூட்டணி வைக்க போவதில்லை. எனக்கு சாப்பாட்டில் பிடிக்காதது கூட்டு தான்... வைகோ... ஆனால் அதை இன்று இந்த திமுக அரசு மறந்து வீரத்தை விற்று கோழைகளாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இதை எதிர்த்து எங்கள் இளைஞர் படை கோவை கற்பகம் காம்ப்லக்ஸிலிருந்து நடை பயணத்தை ஆரம்பிக்க போகிறது என்பதை இப்போது தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் எங்கள் கொள்கையிலிருந்து நாங்கள் விலகவில்லை என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம். இதுக்கு நான் போடால உள்ளேயே இருந்திருக்கலாம்... ஜெயலலிதா... என்னுடன் சண்டை போட்டு போனவுடனே இந்த ஆளை சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு காரணம்னு சொல்லி போடால உள்ள உக்கார வெச்சி உங்களை காப்பாற்றியிருப்பேன்!!! அப்படியில்லைனா வனவிலங்குனு சொல்லி முதுமலைக்காட்டுல கட்டி போட்டிருப்பேன்... தமிழ்நாட்டில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த படமே பெரிய சாட்சி!!! புரட்சி தலைவர் வாழ்க!!! அண்ணா நாமம் வாழ்க!!! சிம்பு... படத்துக்கு யாரு ஃபர்ஸ்ட் டிக்கட் வாங்கிட்டு வராங்கனு முக்கியமில்லை படத்தை யார் கடைசி வரைக்கும் பயப்படாம பாக்கறாங்கன்றது தான் முக்கியம்... |
Views : 867
Favorited : 0
Category : Entertainment
Share with a Friend
Add to favorites
Write a response post
Flag Post



